யாரு பாத்த வேலைன்னு தெரியலையே..!?கழிவறைக்கு மூத்த அரசியல் தலைவர்கள் பெயர்..! கலவரமான அரசியல் வட்டம்

புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின்
public toilet
public toilet Admin
Published on
Updated on
1 min read

கோவை, மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடம் ஒன்றில் மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கோவை அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி அருகே மாநகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடத்துக்குப் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது.

புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் அவர்களின் பெயரும் எழுதப்பட்டு இருப்பது தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பிடத்துக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி இருப்பது தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுக் கழிப்பிடத்தில் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com