சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்...!

சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்...!
Published on
Updated on
1 min read

மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுத்ததாக சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முசிறியை அடுத்த காட்டுக்குளம் ஊராட்சியில் பலகோடி ருபாய் மதிப்பீட்டில் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் சமத்துவபுரம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைத்து திறந்து வைக்குமாறும் அனைத்து சமூக மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யுமாறும் கமலஹாசன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். மனு கொடுக்க வந்த தன்னை கைது சிறையில் அடைத்துவிடுவதாக மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுத்ததாக கமலஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு சிவகங்கையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்ட நபரை சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் செல்போனில் ஆபாசமாக மிரட்டிய ஆடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com