
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில்,புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான, திருச்சியில் இருந்த கட்டுமான பணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே விபத்துக்கு உள்ளாகினர். இரு சக்கர வாகனத்தில் வந்த வெற்றிவேல் மற்றும் மோகன் ஆகியோர் மீது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத இனோவா கார் மோதி, சுமார் 100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு விபத்து.
சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேரும் பலியான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, எடமலை பட்டி புதூர் போலீசார், மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இறந்த இருவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இனோவா காரை தேடி வருகின்றனர்.
திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான குழு ஊழியர்கள், இரண்டு பேர் அதே பகுதியில் விபத்து ஏற்பட்டு, பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்