இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர்... இருவர் கைது...

19 வயது இளம்பெண்னை பின்தொடர்ந்து வந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞருக்கு அடி உதை கொடுக்கப்பட்டது. மேலும், இருவர் கைதாகியுள்ளனர்.
இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர்... இருவர் கைது...
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் | ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கண்ணி அம்மன் நகரை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.இவர் ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார்.இதே கடையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன்/20 என்பவர் பணியாற்றி வந்தார்.

மணிகண்டன் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறதுஇதை துணிக்கடையில் பணி புரியும் மேலாளரிடம் இளம்பெண் தெரிவித்ததால் மணிகண்டனை ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்.

இதன் பின்னரும் பலமுறை மணிகண்டன் இளம் பெண்ணுக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி இரவு இளம்பெண் ஆவடி பேருந்து நிலையம் அருகே வந்து நின்று கொண்டு இருந்தார்.

இவரை மணிகண்டன் பின்தொடர்ந்து வந்து மீண்டும் லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் உடனே தனது தம்பியான சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு ஆவடிக்கு வரும்படி நடந்தததை கூறியுள்ளார்.

இந்த தகவலையடுத்து கண்ணியம்மன் நகர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சாலமன், கருப்புசாமி ஆகிய இருவரை பைக்கில் சதீஷ்குமார் அழைத்து வந்து மணிகண்டனை கையால் சரமாரியாக தாக்கியும் கத்தியால் மாறு பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் மணிகண்டன் அலறல் சத்தம் கேட்டவுடன் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் கருப்புசாமி மற்றும் சாலமனை கைது செய்து விசாரனை நடத்தி பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரை ஆவடி போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com