ரூ.228 கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டங்கள்...! தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்..!

ரூ.228 கோடி மதிப்பில் பல்வேறு புதிய  திட்டங்கள்...! தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்..!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 100 கோடியில் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் அமைப்பது உட்பட ரூ.228 கோடி மதிப்பில் பல்வேறு புதிய  திட்டங்களை மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி துறைமுகத்தில்  மேம்படுத்தப்பட்ட நிலக்கரி கிடங்கு சாலை, 100 சதவீதம் எல்இடி ஆக மாற்றும் திட்டம், புதிய 6 மின்சார கார் சேவைகள், தகவல் தொழில்நுட்ப இணைப்பு மேம்பாடு, மின் போக்குவரத்து திட்ட மேம்பாடு, 140 கிலோ வாட் மேற்கூரை சூரிய மின் திட்டம், 140 மெட்ரிக் டன் மின்னணு எடை மேடை, கப்பல் போக்குவரத்து மென்பொருள், ஆக்சிஜன் ஆலை ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆயுஷ் பிரிவு ஆகிய முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, 1 மணி நேரத்தில் 100 சரக்கு பெட்டக வாகனங்களை சோதனை செய்யும் ஸ்கேனர் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com