கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாணம்...

பனங்காடியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாணம்...
Published on: 
Updated on: 
1 min read

நாகை | திருக்குவளை  அடுத்துள்ள  பனங்காடி கிராமத்தில்  பழமையான அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில்  திருக்கல்யாணம் வைபோகம் இன்றிரவு  வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதனையொட்டி முன்னதாக இன்று காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து  வரத விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க  சீர் வரிசை   கோயிலை சுற்றி ஊர்வலமாக  எடுத்து வரப்பட்டது. பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம்  நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com