பெரியாறு அணையில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்...!!

பெரியாறு அணையில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்...!!
Published on
Updated on
1 min read

பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் யாரும் அணைப்படுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி ,கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி ,மான், மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  சாம்பல் நிற அணிகள் சரணாலயமாக இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி தற்போது மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பிளவைக் கல பெரியாறு அணைப்பகுதியில் மழையின் காரணமாக 47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. 

தற்போது விடுமுறை நாள் என்பதால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் பேச்சிக்கனி பகுதியில் பொதுமக்கள் குளிக்க செல்கின்றனர்.  இந்நிலையில் உள்ள காட்டு யானைகள் தற்போது பெரியாறு அணைப்பகுதியில்  சுற்றித் திரிவதால் பொதுமக்கள் யாரும் அணை பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் அடிவாரத்தை நோக்கி இறங்கியுள்ள  காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய  பகுதிக்குள் சென்று தென்னை, மா ,பலா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com