வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...!

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...!
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டம் வால்பாறைக்கு உட்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தேசிய வன விலங்கு ஆணையம் உத்தரவின் பேரில் இந்த ஆண்டு குளிர் காலத்திறகு பிந்தைய  வன விலங்குகள் கணக்கெடுக்கும்  பணி தொடங்கியது. இதில் வால்பாறை வன அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் 22 நேர்கோட்டு பாதையில் 50 வனவர்கள் வன விலங்குகளின் நடமாட்டம், விலங்குகளின் பாதைகள், நகக்கீரல்கள் போன்றவை கணக்கெடுப்பு பணியில் இடம் பெறுகிறது. யானை புலி, சிறுத்தை, கரடி பறவைகள் போன்றவை குறித்தும் கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்படும். 

மாணம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் 60 நேர்கோட்டு பாதையில் 50க்கும் மேற்பட்ட வனவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். 8 நாட்கள் நடைபெறும் இப்பணியின் விபரம் தேசிய வனஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதில்  பொள்ளாச்சி நவமலை பகுதியில் வனவர் ஐய்யாசாமி, வன காப்பாளர் காளிதாஸ், வன காவலர் பழனிசாமி மற்றும் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com