வன உயிரின வார விழா...! மனித சங்கலி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வன உயிரின வார விழா...! மனித சங்கலி விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு வனத்துறை சார்பில் வருடந்தோறும் வன உயிரின வார விழா அக்டோபர் மாதத்தில் நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் வன உயிரினங்களைப் பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மேட்டுப்பாளையம், ஊட்டி சாலையில் வனத்துறை மற்றும் வன உயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மனித சங்கலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மேலும் நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பாதகைகளை கைகளில் ஏந்தி சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப்ஸ்டாலின், சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com