தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது...

கோவையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கை வரிசை காட்டி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது...
Published on: 
Updated on: 
1 min read

பழனியை சேர்ந்த 32 வயதான சத்யா திருவண்ணாமலை, பழனி, உள்பட பல்வேறு கோவில்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார்.

கோவில்களில் தொடர்ந்து தனது திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி வந்த  அப்பெண் திருவிழா சமயங்களில் அந்தந்த ஊருக்கு வந்து நோட்டமிட்டு பக்தரைப் போல் வேஷமிட்டு நகை பணங்களை திருடி வந்துள்ளார்.

இந்நிலையில் கோவை  பூ மார்க்கெட் அருகே ஒரு பெண்ணிடம் ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகையை திருடிய போது போலீசார் கையும் கழுவுமாக  பிடித்து கைது செய்தனர். இது குறித்து ஆர்.எஸ் புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com