
திருவள்ளூர் | திருத்தணி அருகில் உள்ள பெரிய கடம்பூர் கிராமத்தில் ஏகாத்தம்மாள் என்ற பெண் விவசாயின் பாழடைந்த கிணறு இந்த கிராமத்தின் வெளியில் உள்ளது.
இந்த கிணற்றுக்கு அருகில் ரேகா வயது(30) என்ற பெண்மணி ஆடுமேய்க்க சென்றவர் அந்தப் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக, அந்த பகுதி பொதுமக்கள் திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் பாழடைந்த கிணற்றில் கடும் சிரமத்திற்கு இடையே பழ அடைந்த கிணற்றில் விழுந்து இறந்து போன ரேகா என்ற பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றினர்.
இந்த பிரேதம் திருத்தணி போலீசாரிடம் ஒப்படைத்தனர், திருத்தணி போலீசார் திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு ரேகா பிரேதத்தை அனுப்பி வைத்துவிட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,
ஆடு மேய்க்க சென்ற பெண் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தாயைக் கொன்று மகனும் தற்கொலை செய்து கொண்ட கொடூரம்...