100 லோகோவை பார்த்து அதன் பெயர்களை சொல்லி உலக சாதனை

100 லோகோவை பார்த்து அதன் பெயர்களை சொல்லி உலக சாதனை
Published on
Updated on
1 min read

திண்டுக்கல்லில் இரண்டரை வயது சிறுவன் சமுக வலைதளத்தில் உள்ள 100 லோகோவை பார்த்து அதன் பெயர்களை சொல்லி உலக சாதனை படைத்து உள்ளான்.

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரை சேர்ந்த விவசாயி பாவா, இவரது இரண்டரை வயது மகன் இஃசான் ஹமீஸ், தற்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். இவனுக்கு லோகோவை பார்த்தவுடன் அதன் பெயர்களை சொல்லும் பழக்கம் உள்ளதால், உலக சாதனை படைக்க விரும்பி பள்ளி நிர்வாகிகள், அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் உலக சாதனையை பதிவு செய்ய ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். இதனையடுத்து இஃசான் ஹமீஸ், 100 லோகோவை பார்த்து அதன் பெயரை 8 நிமிடம் 40 வினாடிகளில் கூறினான். இந்த உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com