ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயம்: யுஜிசி அறிவிப்பு..!

ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயம்:   யுஜிசி  அறிவிப்பு..!
Published on
Updated on
1 min read

உதவி பேராசிரியர்கள் கட்டாயமாக பிஎச்.டி., பெற வேண்டும் என்ற முடிவை, பல்கலை மானியக்குழு மாற்றி அமைத்துள்ளது. 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி சார்ந்த ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதியை பல்கலைக் கழக மானியக் குழு  அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பிற கல்வி சார்ந்த பணிகளில் சேர NET, SET, SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றும் என்ற குறைந்தபட்ச தகுதியை அங்கீகரித்துள்ளது. 
இந்த அறிவிப்பு ஜூலை 1 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கூறுகையில்:- 

தேசிய தகுதித் தேர்வு (நெட்), மாநில தகுதித் தேர்வு (செட்) மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) ஆகியவை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் உதவி பேராசிரியர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான குறைந்தபட்ச அளவுகோலாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

அதோடு, நல்ல திறமைசாலிகளை கற்பித்தலில் ஈர்க்க வேண்டும் என்றால் இந்த நிலையை வைத்திருக்க முடியாது.  இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டத்தில் இது தேவைப்படுகிறது. ஆனால், உதவிப் பேராசிரியருக்கான பிஎச்.டி., எங்கள் அமைப்பில் சாதகமாக இல்லை; அதனால் தான், அதை சரி செய்துள்ளோம்”. என்றும்  அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com