
பிரபல தனியார் வங்கியான ஐடிபிஐ (IDBI) வங்கியில் நாடு முழுவதும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இளங்கலை பட்டப்படிப்பு முடித்த தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஜூனியர் உதவி மேலாளர் (Junior Assistant Manager - Grade O) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கித்துறையில் பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 676
ஐடிபிஐ வங்கியில் தற்போது நிரப்பப்படவுள்ள ஜூனியர் உதவி மேலாளர் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 676 ஆகும். இந்த பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
பொதுப் பிரிவு (General) - 271 இடங்கள்
தாழ்த்தப்பட்டோர் (Scheduled Caste - SC) - 140 இடங்கள்
பழங்குடியினர் (Scheduled Tribe - ST) - 74 இடங்கள்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes - OBC) - 124 இடங்கள்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (Economically Weaker Sections - EWS) - 67 இடங்கள்
மேலும், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு இந்த மொத்த காலிப்பணியிடங்களில் இருந்து 31 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு:
இந்த ஜூனியர் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். விண்ணப்பதாரர்கள் 02.05.2000 க்கு முன்னர் பிறந்திருக்கக் கூடாது மற்றும் 01.05.2005 க்குப் பின்னர் பிறந்திருக்கக் கூடாது.
சட்ட விதிகளின்படி, வயது வரம்பில் சில பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி:
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு - 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவினருக்கு - 3 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு - 10 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
கல்வித்தகுதி:
ஐடிபிஐ வங்கியின் இந்த ஜூனியர் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதுமானது. இது தவிர, விண்ணப்பதாரர்களுக்கு கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
சம்பள விவரம்:
இந்த பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6.14 லட்சம் முதல் ரூ. 6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இது பணியின் தன்மை மற்றும் வங்கியின் விதிமுறைகளின்படி மாறுபடலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஐடிபிஐ வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய பல்வேறு நிலைகளில் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு நிலையிலும் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஐடிபிஐ வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbibank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 1,050 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ. 250 செலுத்தினால் போதும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08.05.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 08.06.2025
நேர்காணல் நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும்
ஐடிபிஐ வங்கியில் ஜூனியர் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான பட்டதாரிகள் மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விரிவான தகவல்களை வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம். வங்கிப் பணியில் சேர விரும்பும் டிகிரி முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தவறவிடாதீர்கள்!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்