வெளிநாட்டு படிப்புகள்: யு.ஜி.சியின் புதிய கட்டுப்பாடுகள்!!

வெளிநாட்டு படிப்புகள்: யு.ஜி.சியின் புதிய கட்டுப்பாடுகள்!!

Published on

அயல்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அதற்கு இணையான பட்டம் வழங்குவது மற்றும் அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய வரைவு வழிகாட்டு வழிமுறைகளை பல்கலைக் கழக மானியக் குழு உருவாக்கியுள்ளது. 

ஆன்லைன் வாயிலாக அல்லது தபால் வாயிலாக, வெளிநாட்டு பல்கலைகளில் படித்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது. 

பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு அதற்கு இணையான தகுதிகள் வழங்குவது குறித்தும் வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. 

இந்த புதிய வழிமுறைகள் குறித்த கருத்துக்களை செப்டம்பர் 16 ஆம் தேதி வரை இணையம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com