"மருத்துவர்" என்ற கனவு பலருக்கும் சிறு வயதிலேயே உள்ளது. மருத்துவத் துறையில் சாதனை படைக்க நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீராகிப் போகிறது. இன்று, மருத்துவப் படிப்பு வசதி படைத்தவர்களின் வசமாகிவிட்டது. நடுத்தரக் குடும்ப மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
இருப்பினும், நீட் தேர்வு எழுதாமலே மருத்துவத் துறையில் சாதிக்க உதவும் சில படிப்புகள் உள்ளன. அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. B.Sc Nursing (நர்சிங்)
மருத்துவர்களின் வழிகாட்டுதலுடன் நோயாளிகளைக் கவனிக்கும் செவிலியர் பணிக்கு இந்தப் படிப்பு தயார் செய்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு உள்ளது, மேலும் வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது.
காலம்: 4 ஆண்டுகள்
2. B.Sc Physiotherapy (பிசியோதெரபி)
ஒரு மருத்துவ துணைப் படிப்பாகும். என்பது ஒரு மருத்துவ துணைப் படிப்பாகும். இது உடல் இயக்கவியல் மற்றும் மறுவாழ்வு சிகிச்சையில் கவனம் செலுத்துகிறது. பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த நபர்களின் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், வலியைக் குறைப்பதற்கும், செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கும் பிசியோதெரபி உதவுகிறது.
காலம்: 4 ஆண்டுகள்
3. B.Sc Medical Laboratory Technology (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்)
இரத்தப் பரிசோதனை, நோயறிதல் மற்றும் ஆய்வக சோதனைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குகிறது. நோயறிதல் மையங்களில் அதிக தேவை உள்ளது.
காலம்: 3 ஆண்டுகள்
4. B.Sc Operation Theatre Technology (அறுவை சிகிச்சை அரங்க தொழில்நுட்பம்)
அறுவை சிகிச்சை அரங்கில் உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் மருத்துவர்களுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்கு இந்தப் படிப்பு பயிற்சி அளிக்கிறது.
காலம்: 3 ஆண்டுகள்
5. B.Sc Radiology and Imaging Technology (கதிரியல் மற்றும் படமாக்கல் தொழில்நுட்பம்)
X-Ray, CT-Scan, MRI-Scan போன்ற படமாக்கல் உபகரணங்களைக் கையாளும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குகிறது.
காலம்: 3 ஆண்டுகள்
6. B.Sc உளவியல் (Psychology):
உளவியல் என்பது மனித மனம் மற்றும் நடத்தையைப் புரிந்துகொள்ளும் படிப்பாகும். எளிமையாகச் சொன்னால், ஒருவரின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், அவர்களின் உள்ளத்தில் உள்ள எண்ணங்களையும் உணர்வுகளையும் அறிய முயலும் கல்வியே உளவியல் ஆகும்.
காலம்: 3 ஆண்டுகள்
7. BVSc கால்நடை மருத்துவம் (Veterinary Science):
கால்நடை மருத்துவம் என்பது விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் படிப்பாகும். இது நடைமுறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கல்வியாகும்.
காலம்: 5 ஆண்டுகள்
8. B.Pharm (பார்மசி):
பார்மசி என்பது மருந்துகளின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் பயன்பாடு குறித்து பயிற்றுவிக்கும் படிப்பாகும். இது மருந்தியல், மருந்து வேதியியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கல்வியாகும். மருந்தாளர்கள் மருந்துகளை உருவாக்குவதோடு, நோயாளிகளுக்கு சரியான மருந்து பயன்பாடு குறித்து வழிகாட்டுவதும் முக்கியப் பொறுப்பாகும்.
காலம்: 4 ஆண்டுகள்
9. B.Sc உணவு தொழில்நுட்பம் (Food Technology):
உணவு தொழில்நுட்பம் என்பது உணவு மற்றும் மூலப்பொருட்களின் பதப்படுத்தல், உற்பத்தி, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்றுவிக்கும் படிப்பாகும். இது உணவுத் தொழிலில் நவீன முறைகளைப் பயன்படுத்தி தரமான உணவு உற்பத்தியை உறுதி செய்யும் தொழிற்கல்வியாகும்.
காலம்: 4 ஆண்டுகள்
10. B.Sc ஊட்டச்சத்து மற்றும் உணவியல் (Nutrition and Dietetics):
ஊட்டச்சத்து மற்றும் உணவியல் என்பது மனித உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகள், உணவு முறைகள் மற்றும் உணவு திட்டமிடல் குறித்து பயிற்றுவிக்கும் படிப்பாகும். இது உணவின் மூலம் நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டை மையமாகக் கொண்ட தொழிற்கல்வியாகும். இந்தப் பட்டதாரிகள் மருத்துவமனைகள், உணவுத் தொழில்கள் மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
காலம்: 3 ஆண்டுகள்
நீட் தேர்வு இல்லாமல் இந்தப் படிப்புகள் மாணவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்முறை ரீதியாகவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவுகின்றன. மாணவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ப இந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து, மருத்துவத் துறையில் வெற்றிகரமான பயணத்தைத் தொடங்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்