இராமேசுவரம் கோயிலில் வேலை வாய்ப்பு – 76 பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம்!

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பணியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025
rameshwaram temple job vacancy
rameshwaram temple job vacancyAdmin
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பணியிடங்களை நிரப்ப புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 76 பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 12.03.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் மற்றும் விவரங்கள்:

1. தமிழ் புலவர்

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: தமிழ் பாடத்தில் பி.லிட் / பி.ஏ / எம்.லிட் / எம்.ஏ பட்டம்

சம்பளம்: ரூ. 18,500 – 58,600

2. பிளம்பர்

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ பட்டம்

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

3. காவலர்

காலியிடங்கள்: 18

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

4. கருணை இல்லம் காப்பாளர் (பெண்)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

5. துப்புரவு பணியாளர்

காலியிடங்கள்: 27

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

6. தூர்வை

காலியிடங்கள்: 26

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

7. கால்நடை பராமரிப்பு (கோசாலை)

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதினும் அதிகபட்சம் 45 வயதினும் இருக்க வேண்டும்.

தமிழக அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை:

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rameswaramtemple.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி:இணை ஆணையர் / செயல் அலுவலர்,அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்,இராமநாதபுரம் மாவட்டம் - 623526

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025

தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com