UPSC: மத்திய ஆயுதப்படையில் வேலை வாய்ப்பு – 357 பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2024
upsc job vacancy
upsc job vacancyAdmin
Published on
Updated on
1 min read

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மத்திய ஆயுதப்படை பிரிவுகளில் (CENTRAL ARMED POLICE FORCES) உதவி கமாண்டண்ட் (Assistant Commandants) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 357 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.03.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்:

உதவி கமாண்டண்ட் (Assistant Commandants)

மொத்த காலியிடங்கள்: 357

பிரிவு வாரியான பணியிடங்கள்:

Border Security Force (BSF) – 24

Central Reserve Police Force (CRPF) – 204

Central Industrial Security Force (CISF) – 92

Indo-Tibetan Border Police (ITBP) – 4

Sashastra Seema Bal (SSB) – 33

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயது வரையிலானவராக இருக்க வேண்டும்.

மத்திய அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறைகள்:

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

எழுத்துத் தேர்வு

உடற்தகுதித் தேர்வு

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

UPSC இணையதளமான upsconline.gov.in ல் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ₹200/-

பெண்கள், SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2024

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com