ஒரே நாளில் சூப்பர் மாடலாக மாறிய 60 வயது தாத்தா!! இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஷூட்

கேரளாவைச் சேர்ந்த 60 வயது தினசரி கூலித் தொழிலாளி அம்மாநிலத்தின் புதிய சூப்பர் மாடலாக மாறியுள்ளார். 
ஒரே நாளில் சூப்பர் மாடலாக மாறிய 60 வயது தாத்தா!! இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஷூட்
Published on
Updated on
2 min read

கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதி கொடிவள்ளியைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதாகும் இவர் தினசரி கூலி தொழில் செய்து வருகிறார். வெள்ளை முடி, சால்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என கூல் லுக் கொண்ட இவர் அப்பகுதி இளைஞர்களிடம் நட்பாக பழகுவார். அவர்களும் மம்மிக்கா.. மம்மிக்கா.. என இவரை நட்பாக அழைப்பார்கள்..

இந்நிலையில்தான் , அப்பகுதி போட்டோ கிராஃபர் இவரின் வாழக்கையை மாற்றியுள்ளார்.. வெள்ளை முடி, சால்ட் பெப்பர் முறுக்கு மீசை, தாடி என தாத்தா மாசாக இருக்கிறார் என்பதை கவனித்த அப்பகுதி போட்டோ கிராஃபர் இவரை வைத்து மாடல் போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளார்.. ஆனால், இதற்கு அந்த தாத்தா மறுத்துள்ளார்...

நான் இதெற்கெல்லாம் செட்டாக மாட்டேன் என மம்மிக்கா கூறியுள்ளார்.. அதனால், அதன்பின் போட்டோ கிராஃபர் ஷரீக் தன்னுடைய போடோட்களை காட்டி அவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடைசியில் அவரை போட்டோ சூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளனர்..

பின்னர் மம்மிக்காவிற்கு கோட் சூட் போட்டு.. மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு எடுத்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது..

இவரின் இந்த போட்டோ ஷூட் அனைவரையும் கவர்ந்தது.. ஸ்டைலாக நிற்பதும், நடப்பதும்.. கூலாக கண்ணாடி போட்டுகொண்டு போஸ் கொடுப்பதும் இணையத்தில் செம வைரலாகி வருகிறது..

இந்த வைரலான போட்டோஷூட்டில் தினசரி கூலித் தொழிலாளி மம்மிக்கா மாடலாக மாறியுள்ளார்.  சொந்த ஊரில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தற்போது ஹீரோவாகி விட்டார். இவர் மாடலாக இருந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது வைரலாகியுள்ளது. மேலும் தொடர்ந்து கூலித்தொழில் மற்றும் மாடலையும் சேர்ந்து செய்ய போவதாக மம்மிக்கா கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com