71 -ஆவது தேசிய திரை விருதுகள்: தட்டி தூக்கிய “பார்க்கிங்..” ஜி.வி -க்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!!

இந்த படம் சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருது உள்ளிட்ட மூன்று...
71th film fair
71th film fair
Published on
Updated on
1 min read

71 -ஆவது தேசிய திரைப்பட  விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. CBFC (Central Board Of Film Certification )  விருதாளர் பெயரை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த “பார்க்கிங்” படம் திரையரங்குகளில் மட்டுமல்லாது ott தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த படம் சிறந்த திரைக்கதை, சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான விருது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகளை தட்டிச்சென்றது. படத்தில் கீழ் வீட்டுக்காராக நடித்திருந்த எம்.எஸ் பாஸ்கர் படம் வெளியின்போதே தனது இயல்பான நடிப்புக்காக பல பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி. வி பிரகாஷ் வென்றுள்ளார். தனுஷ் நடிப்பில் உருவான வாதி படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com