மகளுடன் கெத்தாக நடந்து வரும் ரஜினி... வைரலாகும் போட்டோ...

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
மகளுடன் கெத்தாக நடந்து வரும் ரஜினி... வைரலாகும் போட்டோ...
Published on
Updated on
1 min read
சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக, அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 
இந்நிலையில்,  சிகிச்சைக்காக மீண்டும் சில தினங்களுக்கு முன்பு, தனி விமானம் மூலம் ரஜினி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் ரஜினி நடந்து வரும் புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com