டம்மி மகளை 3-வது திருமணம் செய்யும் அமீர்கான்..! 2-வது மனைவியை விகாரத்து செய்த நிலையில் கிசுகிசுப்பு..!

29-வயது பெண்ணை 3-வதாக திருமணம் செய்யும் அமீர்கான்..!
டம்மி மகளை 3-வது திருமணம் செய்யும் அமீர்கான்..! 2-வது மனைவியை விகாரத்து செய்த நிலையில் கிசுகிசுப்பு..!
Published on
Updated on
2 min read

ஹிந்தி உலகில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வித்தியாசமான கதைகளில் நடித்ததன் மூலம் ஹிந்தி மட்டுமின்றி பிற மொழி மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். தற்போது இவரது 3-வது திருமணம் குறித்து தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

அமீர் கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை கடந்த 2002-ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். இந்த ஜோடிக்கு ஜூனைத், ஈரா என்ற இரு குழந்தைகள் உள்ளன. இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டில் லகான் இந்தி திரைப்படத்தில் நடித்த போது, துணை இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் இருவரும் பிரியவுள்ளதாக அமீர்கானும், அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, நடிகை பாத்திமா சனாஷேக்கின் பெயர் பெரிதும் அடிப்பட்டது. 

அமீர்கான் நடிப்பில் கடந்த 2016- ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் அடித்தப் படம் தங்கல். இந்தப் படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனாஷேக். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், விருந்துகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பாத்திமா சனாஷேக்கை திருமணம் செய்யவே, கிரண் ராவை அமீர்கான் விவாகரத்து செய்ய முடிவெடுத்ததாகவும், விரையில் 56-வயதான அமீர்கான், 29-வயதாகும் பாத்திமா சனாஷேக்கை 3-வதாக திருமணம் செய்துக் கொள்வார் என பாலிவுட்டில் பரப்பரப்பாக கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com