’ஜெய்ஹிந்த்’ பட நடிகருக்கு கொரோனா...கவலையில் ரசிகர்கள்...!

நடிகர் அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
’ஜெய்ஹிந்த்’ பட நடிகருக்கு கொரோனா...கவலையில் ரசிகர்கள்...!
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜூன், முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இன்றளவும் தன் முத்திரையை பதித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி கன்னடா, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஆக்‌ஷன் பிளாக் பஸ்டராக அமைந்ததால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

தற்போது, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றை  தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல், சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நடிகர் அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து , நடிகர் அர்ஜூன் " எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

எனவே, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். நான் நலமுடன் இருக்கிறேன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்" என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com