நடிகர் கிச்சா சுதீப் - பை காண முடியாமல் ரசிகர்கள் ரகளை...

நடிகர் கிச்சா சுதீப் - பை காண முடியாமல் ரசிகர்கள் ரகளை...

Published on

கர்நாடகாவில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தி விழாவில் நடிகர் கிச்சா சுதீப் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாவண்கரே மாவட்டம் ஹிரியூர் என்ற பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், அரசியல் தலைவர்கள், வால்மீகி மடத்தின் மடாதிபதிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் சுதீப் கலந்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் வரவில்லை என அறிவிப்பு வெளியானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com