ஆரூர் தாஸ்- உடலுக்கு மனோபாலா அஞ்சலி...

வசனகர்தா ஆரூர் தாஸிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆரூர் தாஸ்- உடலுக்கு மனோபாலா அஞ்சலி...
Published on
Updated on
1 min read

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா, பல படங்களுக்கு தானே வசனமும் எழுதியிருக்கும் நிலையில், ஒரு சிறந்த வசனகர்தாவின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் ஆரூர்தாஸ் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ஆருர்தாஸ் மறைவு தமிழ் திரை உலகத்திற்கு பேரிழப்பு. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ளார். பேசுவதற்கு எளிமையான வசனகர்த்தாவாக அவர் பார்க்கப்படுகிறார். வசனத்திற்காகவே போற்றப்பட்ட படம் பாசமலர். அவரை இழந்து வாழும் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com