சமந்தா-நாகசைதன்யா விவாகரத்துக்கு ''என்னைப்பற்றி எதிர்மறையாக எழுதுவதால் எனது குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகுகிறது!” - நடிகர் நாகார்ஜுனா

சமந்தா-நாகசைதன்யா விவாகரத்துக்கு ''என்னைப்பற்றி எதிர்மறையாக எழுதுவதால் எனது குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகுகிறது!” - நடிகர் நாகார்ஜுனா

ஊடகத்தில் தன்னை பற்றி எதிர்மறையான கருத்துக்களை எழுதுவதால் தனது குடும்பம் பாதிப்புகுள்ளாவது மிகுந்த கவலை அளிப்பதாக நடிகர் நாகார்ஜுனா தெரிவிதுள்ளார்.

தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யா கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக, சமீபத்தில்  சமந்தா-நாகசைதன்யா இருவரும் தங்களது நான்கு வருட காதல் வாழ்க்கையை முடித்து கொண்டனர்.

ரசிகர்களால் மிகச் சிறந்த  ஜோடி என்று பாராட்ட பெற்ற சமந்தா - நாகசைதன்யா ஜோடி பிரிந்த நிகழ்வு சமூகவலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இன்றளவும் இணையத்தில் பேசு பொருளான இந்த விவகாரம், தங்கள் குடும்பத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தற்போது நடிகர் நாகசைத்தன்யாவின் தந்தையான நடிகர் நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியபோது, ஊடகங்கள் என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதுவது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றிற்கு எனது குடும்பம் பலிகடாவாகும்போது தான் மிகவும் கவலையாக உள்ளது’ என்று நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com