
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே நடிகர் ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தலைவர் -170’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பூஜையுடன் துவங்கி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள தனியார் தரை ஓடு தொழிற்சாலையில் சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பு இன்று 3-வது நாளாக நடந்தது.
அப்போது, படப்பிடிப்பை காண வந்த பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் வந்ததால், தனியார் பாதுகாப்பு பவுன்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.