’காளையை ‘ கையில் பிடித்துக்கொண்டு புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா..! வைரலாகும் வீடியோ

கையில் ”காளையை’ பிடித்துக்கொண்டு நடிகர் சூர்யா புத்தாண்டு வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
’காளையை ‘ கையில் பிடித்துக்கொண்டு புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா..! வைரலாகும் வீடியோ
Published on
Updated on
1 min read

ஏப்ரல் 14 ஆம் தேதியான இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டு திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் உலகில் உள்ள தமிழர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும்,  திரையுலக பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது இணையதளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா காளை மாடு ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு நடந்து வரும் வீடியோ சற்றுமுன் வெளியானது. அதில் சூர்யா “இனிய தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்” என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com