
நடிகர் துல்கர் சல்மான் லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இதையடுத்து தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார் துல்கர்.
அதில், "தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகி, வீட்டில் தன்னை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பின் போது தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால், தயவுசெய்து தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.