திடீரென சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்! காரணம் என்ன?

நடிகர் விஷ்ணு விஷால் திடீரென சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக தான்  விலகுவதாக அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்! காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் ’நீர்ப்பறவை’ ’முண்டாசுப்பட்டி’ ’ஜீவா’என பல வெற்றிப்படங்களில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு “ராட்சசன்” திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அதேபோன்று சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “எப்.ஐ.ஆர்” படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது ’மோகன்தாஸ்’ படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து ’கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் திடீரென விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக தான் விலகுவதாகவும், விரைவில் சந்திப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் விலகுவதற்கான காரணத்தை விஷ்ணு குறிப்பிடவில்லை. இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமில்லாமல் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.   

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com