வீரேந்திர சேவாக் Vs விஷ்ணு விஷால்... சேவாக்கிடம், நடிகர் விஷ்ணு கேட்ட கேள்வி!!

வீரேந்திர சேவாக் Vs விஷ்ணு விஷால்... சேவாக்கிடம், நடிகர் விஷ்ணு கேட்ட கேள்வி!!

இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? என சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா என்கிற பெயரை "பாரத் " என பெயர் மற்றம் செய்வது குறித்து இந்திய முழுவதும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனை எதிர்த்தும், ஆதரித்தும் பலரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தனது X தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார். அதில், "ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். எங்கள் உண்மையான பெயர் 'பாரத்' என்பதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலமாகிவிட்டது. நான் பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் சேவாக்கின் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் விஷ்ணு விஷால் X தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன் எனவும் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com