ஸ்டைலா மாஸா கெத்தா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா...கமெண்ட்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்..

நடிகையும் பாடகியுமான நடிகை ஆண்ட்ரியா செம ஸ்டைலிஷான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
ஸ்டைலா மாஸா கெத்தா போஸ் கொடுத்த ஆண்ட்ரியா...கமெண்ட்டுகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்..
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா பிறகு ஆயிரத்தில் ஒருவன் படம் மூலம் நடிகையாக பிரபலமானார்.  அதன்பின்  மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி என தொடர்ந்து சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

நடிகைகள் பலரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் அதிக கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனையடுத்து, பிசாசு-2, கா, நோ என்ட்ரி உள்ளிட்ட படங்களை நடிகை ஆண்ட்ரியா தன் கைவசம் வைத்துள்ளார்.

இதற்கிடையே நடிகையாக மட்டுமில்லாமல், பாடகியாகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். மேலும், இவரது குரலில் வெளியாகும் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த வகையில், சமீபத்தில் இவரது குரலில் வெளியான ஊஊஊ சொல்றியா மாமா சென்சேஷனல் ஹிட் கொடுத்துள்ளது.

நடிகையாக தனி இடத்தைப் பிடித்திருந்தாலும் இவரது போதையேற்றும் குரலுக்கு இன்றும் பல ரசிகர்கள் அடிமையாகி உள்ளனர். சில படங்களில் மட்டுமே பாடல்களை பாடி வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊஊஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடியுள்ளார். சமந்தாவின் அட்டகாசமான நடனத்தில் உருவான இந்த பாடல் இப்போது ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளது.

என்னதான் படங்களில் பிஸியாக நடித்தாலும், அவ்வப்போது சுற்றுலா மேற்கொண்டு அங்கு எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவது நடிகைகளுக்கான ஒரு வழக்கம். அதன்படி, சமீபத்தில் ஆண்ட்ரியா எகிப்த் நாட்டிற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியது.

இந்நிலையில், மீண்டும் சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா அங்கு எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செம ஸ்டைலிஸாக நின்று கொண்டிருந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஸ்டைலிஷ் தமிழச்சியே என வர்ணித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com