சரக்கு பாட்டிலுடன் ரசிகர்களை கிக் ஏத்தும் இலியானா...

தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை இலியானா மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சரக்கு பாட்டிலுடன் ரசிகர்களை கிக் ஏத்தும் இலியானா...
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். ஆனால், மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வந்தார். இதனையடுத்து பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தார் நடிகை இலியானா. 

இதற்கிடையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா அந்த படத்தில் ஆடிய பெல்லி டான்ஸ் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

இதனைத்தொடர்ந்து, ஏற்பட்ட காதல் தோல்வியால் பெரிதும் படங்களில் நடிக்க விருப்பம் காட்டாத இவர், தற்போது சில ஹிந்திபடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அவ்வப்போது, நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை இலியானா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com