இத்தாலிக்கு பறந்த மாளவிகாமோகன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இத்தாலிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகை மாளவிகா...!
இத்தாலிக்கு பறந்த மாளவிகாமோகன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
Published on
Updated on
2 min read

மலையாள நடிகையாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் தமிழில் ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதுவும் ‘அந்த கண்ண பார்த்தாக்கா” பாடல் மூலம் அனைவரின் கண்ணையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

இதனைத்தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “மாறன்“ திரைப்படத்தில் நடித்திருந்த மாளவிகா, பாலிவுட்டில் ஆக்ஷன் திரைப்படமான “யுத்ரா“வில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து “ஹீரோ“ எனும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். 

இப்படி தென்னிந்திய மொழிப்படங்கள் அனைத்திலும் கால்தடம் பதித்து வரும் மாளவிகா, அவ்வப்போது பதிவிட்டு வரும் தனது புகைப்படத்தால் இணையம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறார். அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மாளவிகா, அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நடிகை மாளவிகா, இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக ரோம் நகரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் அதிகமாக ஷேர் செய்து வருகிறார். தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com