2012 ல் நான் மீண்டுவர நீங்கள் ஒருவர் தான் காரணம்! சமந்தா யாரை கூறுகிறார்?

2012 ல் நான் மீண்டுவர நீங்கள் ஒருவர் தான் காரணம்! சமந்தா யாரை கூறுகிறார்?

Published on

நான் பிரச்சனைகளால் துவண்டு போன நேரத்தில் என்னை மீண்டுவர செய்தவர் நீங்கள் ஒருவர் தான் என நடிகை சமந்தா போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி நடிகையான சமந்தா, நடிப்பில் கடந்த 2019ஆம் ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஓ பேபி’. இந்த படத்தை நந்தினி ரெட்டி என்பவர் இயக்கினார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்தப் படத்தை இயக்கிய நந்தினி ரெட்டியின் பிறந்தநாளையொட்டி நேற்று அவருக்கு தனது வாழ்த்துக்களை நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், ‘ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் மிகவும் பிரச்சனையாக இருந்த நேரத்தில் எனக்கு நீங்கள் தன்னம்பிக்கையை ஊட்டினீர்கள். அது எனக்கு நேற்றைப் போலவே இருக்கிறது. கடந்த 2012ஆம் ஆண்டு நான் மிகவும் தன்னம்பிக்கை இழந்து படப்பிடிப்புக்கு கூட செல்ல தயங்கினேன். நீங்கள் அந்த நேரத்தில் என்னை பார்க்க வந்தீர்கள்.

உங்களுடைய பிஸியான நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி எனக்கு நம்பிக்கையை திரும்ப கொடுத்தீர்கள். அடுத்த நாளே நான் நீங்கள் கொடுத்த தன்னம்பிக்கையால் படப்பிடிப்புக்கு சென்றேன். எப்படி அந்த தன்னம்பிக்கை எனக்கு வந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது’ என்று அவர் பதிவு செய்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com