சமந்தா - நாகசைதன்யா மீண்டும் இணைய வாய்பில்லையாம்! வெளியான அதிர்ச்சி தகவல்?

சமந்தா - நாகசைதன்யா மீண்டும் இணைய வாய்பில்லையாம்! வெளியான அதிர்ச்சி தகவல்?
Published on
Updated on
1 min read

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு பிறகு நடிகை சமந்தாக்கும் , நாகசைதன்யாவுக்கும்  இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்று சில செய்திகள் பரவி வந்தாலும், இதுவரை அப்படி எந்த ஒரு உறுதியான தகவலும், சமந்தா - நாக சைதன்யாவின்டம் இருந்து வரவில்லை என்றே தான் சொல்லனும். 

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாங்கள் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறும் விதமாக நடிகை சமந்தா தற்போது ஒரு காரியத்தை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை சமந்தா தனது திருமண புடவையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடமே மீண்டும் கொடுத்துவிட்டாராம். நடிகை சமந்தாவின் அதிர்ச்சியளிக்கும் இந்த செயல் மூலம், இணையமே சூடேறி கிடக்கிறது.

இதனால் சமந்தா - நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணையவே போவதில்லை என்று அழுத்தமாக தெரியவந்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com