பிரபல நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கிய நடிகை சமந்தா? செய்தி வெளியிட்ட ஊடகம்!

பிரபல நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கிய நடிகை சமந்தா? செய்தி வெளியிட்ட ஊடகம்!
Published on
Updated on
1 min read

நடிகை சமந்தா தனது மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடமிருந்து ரூ.25 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தென்னிந்திய நடிகையான சமந்தா, தமிழில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதேபோல் தெலுங்கிலும் தன் கால் தடத்தை பதித்த நடிகை சமந்தா, தன் திறமையான நடிப்பால் அங்கேயும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். 

ஆனால், கடந்த வருடம் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் சமந்தா பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன்காரணமாக சமந்தா தான் நடிக்கவிருந்த படங்களில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியாகியது. இருப்பினும், நடிகை சமந்தா “குஷி” என்ற படத்தில் நடித்து வந்தார். 

அந்தவகையில் தற்போது நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள ‘குஷி’ படத்தையும், வருண் தவணுடன் இணைந்து நடித்த ‘சிட்டாடெல்’ என்ற வெப் தொடரையும் முடித்துவிட்டார். இதையடுத்து அவர் தசை அழற்சிக்கான மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், இதனால் சில தயாரிப்பாளர்களிடமிருந்து தான் ஏற்கெனவே பெற்ற முன் பணத்தைத் திருப்பி அளித்ததாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் தனது இந்தோனேஷியா சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் நடிகை சமந்தா, தனது மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளதாக தெலுங்கு சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அந்த நடிகர் யார் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை. அதேபோல், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com