18 கிலோ உடலை குறைத்த பிரபல நடிகை.. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்.!!

நடிகை ஷர்தா ஸ்ரீநாத், அவரது உடல் எடை குறைத்த அனுபவத்தை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
18 கிலோ உடலை குறைத்த பிரபல நடிகை.. வைரலாகும் வேற லெவல் புகைப்படம்.!!
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் ஷர்தா ஸ்ரீநாத். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. 

ஷர்தா ஸ்ரீநாத் ஆரம்ப காலத்தில் உடல் எடை அதிகரித்துள்ளார். ஆனால் அதன்பிறகு படிப்படியாக உடல் எடையை குறைத்துள்ளார். அவர் உடல் எடை குறைத்த அனுபவத்தை பற்றியும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

முதலில் இவர் 5 நிமிடத்திற்கு மட்டும் தான் ஓடுவேன். சில மாதங்களுக்குப் பிறகு 15 நிமிடம் விடாமல் ஓட தொடங்கினேன். அதன்பிறகு 40 நிமிடம் ஓடினேன். கிட்டத்தட்ட 5 வருடத்தில் 18 கிலோ குறைத்து உள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது இவர் உடல் எடை அதிகரித்த புகைப்படமும் தற்போது உடல் எடை குறைத்து புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது நம்ம ஷர்தா ஸ்ரீநாத் இவ்வளவு குண்டா இருந்துள்ளார் என கேள்வி கேட்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com