நோ மீன்ஸ் நோ.... இந்த படத்துல நடிக்க மாட்டேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ்

நோ மீன்ஸ் நோ.... இந்த படத்துல நடிக்க மாட்டேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on
Updated on
1 min read

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதையை தாங்கிப்பிடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

அப்படி இல்லையெனில் கதையின் டுவிஸ்ட்டுக்கு தேவையான முக்கியமான பாத்திரமாகவோ, ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படும் பாத்திரமாகவோ அது இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

அதனால் தான் சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் ராணா இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு தேடி வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதற்கு காரணம் பெண் கதாபாத்திரம் திரையில் சில காட்சிகள் மட்டுமே வருவதுடன் கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக இருப்பதால் அப்படத்தை தவிர்த்துள்ளார் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதேசமயம் வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com