செல்வராகவனுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

செல்வராகவனுடன் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
Published on: 
Updated on: 
1 min read

சமீபத்தில், பல வுமன் செண்ட்ரிக் படங்கள் வெளியாகி வரும் நிலையில், தைரியமான பெண்கள் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஐஸ்வரிய்டா ராஜேஷ், இரண்டு படங்கள் குறித்து அடுத்தடுத்து அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரது டிரைவர் ஜமுனா படம் மற்றும் சொப்பன சுந்தரி படத்தை அடுத்து, “ஃபரீனா”. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வரியா ராஜேஷுடன், செல்வ ராகவன், ஜித்தன் ரமேஷ், பிக்பாஸ் புகழ் ஐஸ்வரியா தத்தா, போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில், நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்த் அதகவல் மக்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com