2 மகன்களும் தனக்கு Kiss - தரும் போட்டோவை கவிதையாய் வர்ணித்த ஐஸ்வர்யா ரஜினி!

2 மகன்களும் தனக்கு Kiss - தரும் போட்டோவை கவிதையாய் வர்ணித்த ஐஸ்வர்யா ரஜினி!

நடிகர் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது மகன்கள் குறித்து பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Published on

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் உள்ளனர். 

என்னதான் தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யா அறிவித்தாலும் தனது இரு மகன்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் என்பது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் இருந்தே தெரிகிறது.

இந்நிலையில் நேற்று உலக கவிதை நாள் கொண்டாடப்பட்டது.  இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன்கள் குறித்த அழகிய கவிதையை பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும் அவர் தனது இரண்டு மகன்களும் தனக்கு அன்பாக முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். 

அவர் பதிவு செய்துள்ள கவிதையில், ”என் வயிற்றில் இருக்கும் போது என்னை உதைத்தாய்... இப்போது நீங்கள் இருவரும் வளர்ந்து என்னை முத்தமிடுவதை நான் ரசிக்கிறேன்... அன்பான ஆத்மாக்களை மகன்களாக பெற்றதற்கு கடவுளுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன்... உங்களுக்கு திருப்பி செலுத்த என்னிடம் இருப்பது பிரார்த்தனை மட்டுமே... உங்கள் ஒவ்வொரு வளர்ச்சியையும் பொக்கிஷமாக பார்ப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த கவிதையை பார்த்த ரசிகர்கள் சிலர் அருகில் தனுஷ் இருந்தால் நல்லா இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com