வாழு, வாழ விடு: திரையுலகில் 30ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நடிகர் அஜித் அறிக்கை...

29 ஆண்டுகள் திரையுலகில் நிறைவு செய்த நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாழு, வாழ விடு: திரையுலகில் 30ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நடிகர் அஜித் அறிக்கை...
Published on
Updated on
1 min read
1992 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் முதன்முதலாக அறிமுகமான அவர், அதன் பின்னர்தான் அமராவதி என்ற தமிழ்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் உயர்ந்த அவர், தற்போது திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் 30வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அஜித் தனது மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திர மூலமாக அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள், விமர்சிப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரு நாணையத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களிடம் இருந்து அன்பையும், விமர்சிப்பவர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து கருத்தையும் ஏற்கிறேன். வாழு, வாழ விடு. என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார் என தெரிவித்துள்ளார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com