" AK  47...AK  47...AK  47.." தூளாக வெளியான துணிவு படத்தின் ட்ரைலர்..!

" AK 47...AK 47...AK 47.." தூளாக வெளியான துணிவு படத்தின் ட்ரைலர்..!

Published on

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான துணிவு படத்தின் ட்ரைலர் கோலாகலமாக வெளியானது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். பல்லாயிர கணக்கான ரசிகர்களை கொண்ட இவரின் படத்திற்கு எப்போதுதுமே மவுசு அதிகம். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள துணிவு படத்திற்கும் அதே நிலை தான் நீடிக்கிறது.  

அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார், ஜான் கொக்கேன், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையில், ’சில்லா சில்லா’ பாடலும் ‘காசேதான் கடவுளடா’ பாடலும்  ‘கேங்க்ஸ்டா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதற்காக நெல்லையில் உள்ள திரையரங்கில் ட்ரைலர் வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் பேனர் வைத்து, கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அந்த வகையில் படத்தின் ட்ரைலர் இன்று மாஸாக வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது. பேங்க் ஹைஜாக்கில் ஈடுபடும் ஏ.கே, உயர் ரக துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபடுகிறார்.  1.51 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரைலர் வெளியான அரை மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் படத்திற்காக ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com