“அகாண்டா 2 படத்திற்க்கு இடைக்கால தடை..” பணம் கொடுக்கல், வாங்கலில் சிக்கல்!!

Eros நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 11 கோடியே 22 லட்சம் ரூபாயை 14 சதவீத வட்டியுடன்...
akhanda-2
akhanda-2
Published on
Updated on
1 min read

நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Eros international Media limited என்ற நிறுவ்ணத்துக்கும், 14 reels entertainment private limited என்ற நிறுவனத்துக்கும் இடையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. 

இதில், Eros நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 11 கோடியே 22 லட்சம் ரூபாயை 14 சதவீத வட்டியுடன், 27 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என, 14 reels நிறுவனத்திற்கு மத்தியஸ்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த உத்தரவை அமல்படுத்தாமல், நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படத்தை வெளியிட 14 reels நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என Eros நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சி குமரப்பன் அடங்கிய அமர்வு, இந்த பிரச்னை தொடர்பாக தனி நீதிபதி முன்  உள்ள வழக்கு விசாரணைக்கு பட்டியலிடும் வரை படத்தை வெளியிட கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், பணப்பிரச்சனை தொடர்பான வழக்கை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது, தடையை நீட்டிப்பது குறித்து தனி நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com