வெளியானது 'ரசவாதி' பர்ஸ்ட் லுக்!

வெளியானது 'ரசவாதி' பர்ஸ்ட் லுக்!

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகும் ரசவாதி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

மௌனகுரு மற்றும் மகாமுனி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சாந்தக்குமார். இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் இவருக்கென தனி ரசிக வட்டாரம் உண்டு. தற்போது வைத்து இரசவாதி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் நாயகனாக கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக கலக்கிய அர்ஜூன் தாஸ் நடித்துவருகிறார். தனது கட்டைக்குரலில் இவர் பேசும் வசனங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயக்குநர் சாந்தக்குமாரின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்பத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ரம்யா, தன்யா, ஜிஎம் சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். பாலோ கொயலோவின் புகழ் பெற்ற நாவலான ரசவாதி எனும் தலைப்பு இப்பத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்து வெளியான அநீதி திரைப்படம் வெளியாக சிறந்த வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் அர்ஜீன்தாஸ் இயக்குநர் சாந்தகுமாரோடு இணைந்துள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.  

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com