நவராத்திரி கொண்டாட்டத்தில் அசத்திய சூப்பர் சிங்கர் பாடகர்கள் !!   ரசிகர்களின் வீட்டுக்குச் சென்ற விஜய் டிவி ஸ்டார்ஸ் ! 

நவராத்திரி கொண்டாட்டத்தில் அசத்திய சூப்பர் சிங்கர் பாடகர்கள் !!    ரசிகர்களின் வீட்டுக்குச் சென்ற விஜய் டிவி ஸ்டார்ஸ் ! 

2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000 க்குமேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்த ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நவராத்திரி கொண்டாட்டம் !!

தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய்  தொலைக்காட்சி, நவராத்திரி விழாவைப் புதுமையான முறையில் தமிழக மக்களுடன் இணைந்து  கொண்டாடியுள்ளது.   தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன், விஜய் டிவி ஸ்டார்ஸ் இணைந்து,  நவராத்திரி கொண்டாட்ட விழாவைக் கொண்டாடியுள்ளனர். 2500 பெண்கள் கலந்துகொள்ள, 10000 க்குமேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக இந்த விழா நடந்தேறியுள்ளது. 

பொதுமக்கள் கலந்துகொள்ளத் திரு விளக்குப் பூஜை,  சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் என  பல்வேறு நிகழ்வுகள் மூலம் அசத்தியுள்ளது விஜய் டிவி.  மொத்தமாக ஏழு நகரங்களில் நடந்த இந்த விழாவினில் 2500 க்கும் மேற்பட்ட பெண்கள் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன், திரு விளக்கு பூஜை உட்பட  நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது . ஒவ்வொரு ஊர்களில் மக்கள் திரள் திரளாகக் கூடி, நவராத்திரி விழாவினை விஜய் டிவி உடன் இணைந்து கொண்டாடினர். 
ஏறத்தாழ 10000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி இவ்விழாவினை ரசித்துள்ளனர். 

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து  கலந்துகொண்டு நவராத்திரியைக் கொண்டாடினர் இவர்களுடன் ஸ்டார் விஜய் முன்னணி பிரபலங்கள் பலரும் இவ்விழாவினில் பங்கேற்றனர். 

விஜய் தொலைக்காட்சி நவராத்திரி ஸ்பெஷலாக  நடந்து முடிந்த,  நவராத்திரி கொண்டாட்டங்கள், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் அவர்கள் மனதில் என்றென்றும் மறக்க முடியாத மகிழ்வான நினைவுகளைத் தந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com