யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் மீண்டும் இணைய உள்ளனர்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி பிரியாமணி சரவணன் பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் பருத்தி வீரன். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவர்களது கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. அதற்கு முன்னர் சில ஆண்டுகளாக நகரத்தையே மையம் கொண்டிருந்த சினிமா துறையை கிராமங்களை நோக்கி திருப்பியதில் இதன் பங்கு அளப்பரியது.
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தில் தனது தந்தையான இளையராஜாவை அறியாத வயசு பாட வைத்திருந்தார் இப்பாடல் இன்றளவும் பலரின் விருப்பமான பாடலாக உள்ளது. நாட்டுபுற இசையை திரையில் கொணர்ந்த டங்கா டுங்கா, ஊரோரம், புளியமரம், ஐய்யய்யோ ஆகிய பாடல்களும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.
இதற்கு முன்னரே மெளனம் பேசியதே ராம் உள்ளிட்ட திரைப்படத்தில் உருவாகி இருந்த அமீர் யுவன் கூட்டணி பருத்தி வீரன் என்ற சிறந்த படத்தை கொடுத்து வசூலை அள்ளியது மட்டுமின்றி தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. பருத்தி வீரனுக்கு பிறகு இவர்கள் இணைந்த ஆதி பகவன் சொல்லும் அளவிற்கு பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்னர் அமீரும் நடிப்பு அரசியல் என நகர்ந்து சென்றதால் படங்கள் எதுவும் இயக்காமலே இருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.
ஆனால் இந்த முறை அமீர் தாயாரிப்பாளராக யுவனுடன் இணைய உள்ளார். ரமேஷ் பாலக்கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அமீர், சத்யா, சஞ்சிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளது.
இதையும் படிக்க:பீம் ஆர்மி தலைவர் மீது துப்பாக்கி சூடு; முதலமைச்சர் கண்டனம்!