பீஸ்ட் படத்தின் கதையை கசியவிட்ட அமெரிக்க திரையரங்கு...! முழு கதை இதுதானா..?

தளபதி விஜய்யின் பீஸ்ட் பட கதையை அமெரிக்க திரையரங்கு ஒன்று வெளியிட்டுள்ளது. 
பீஸ்ட் படத்தின் கதையை கசியவிட்ட அமெரிக்க திரையரங்கு...! முழு கதை இதுதானா..?
Published on
Updated on
2 min read

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனிடையே இப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி மிகப் பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் இந்தியில் பீஸ்ட் படத்தின் ட்ரைலரை நடிகர் வருண் தவான் வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் இந்தி ட்ரைலரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எப்பொழுதும் நான் விஜய் சாரின் பெரிய ரசிகன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ட்ரைலர் மட்டும் தான் வெளியாகி வருகின்றது. ஆனால், அமெரிக்கா பீஸ்ட் பட கதையை கேலக்ஸி திரையரங்கம் மூலம் பகிர்ந்துள்ளது. அதில் நகரின் பரபரப்பான பகுதியை சர்வதேச பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். பயங்கரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். 

இந்த நிலையில் பயங்கரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் ரா உளவு அமைப்பின் முன்னாள அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, அவரது உதவியை நாடுகின்றனர். 

அந்த  முன்னாள் அதிகாரி பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படத்  தொடங்குகிறார். அதன் ஒரு பகுதியாக பயங்கரவாத அமைப்பின் தலைவரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் முன்னால் உளவு அதிகாரி புத்திசாலி தனமாக செயல்பட்டு  பயங்கரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, பயங்கரவாதிகளை ஒழித்துகட்டுகிறார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.   

‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி அமெரிக்காவில் வெளியாக உள்ள நிலையில்,  இந்த படத்தின் கதை முன்னோட்டத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com