ஆதிபுருஷ் படத்தின் ராமரும் சீதையும் உண்மையில் இணைய போகிறார்களா?

ஆதிபுருஷ் படத்தில் நடித்த பிரபாஸ் மற்றும் கிரித்தி சானோன் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
ஆதிபுருஷ் படத்தின் ராமரும் சீதையும் உண்மையில் இணைய போகிறார்களா?

நடிகர்கள் சமீப காலங்களில் தங்களுடன் நடித்த நடிகர்களை காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், தற்போது நடிகர் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிதர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரசித்தியான நடிகர் பிரபாஸ் தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஆதிபுருஷ் என்ற புராண கதையான ராமாயண கதையில் ராமராக நடித்திருக்கிறார். அவருடன் சீதையாக கிருத்தி சானோன் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், மிகவும் அதிகமாக பெண் ரசிகைகள் கொண்ட பிரபாஸ் கிருத்தியை டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்றும், இருவருக்கும் அடுத்த வாரம், மாலத்தீவில் நிச்சயம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com