'மூடர் கூடம்' படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிப்பில் 'அக்னிச் சிறகுகள்' திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் குறித்த அப்டேட் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நடிகர் அருண் விஜய் இந்தப் படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.